ராணுவ பின்னணியில் உருவாகும் கமல்ஹாசன் திரைப்படம்

ராணுவ பின்னணியில் உருவாகும் கமல்ஹாசன் திரைப்படம்

கமல்ஹாசனின் 233-வது திரைப்படம் ராணுவ பின்னணியில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கல்கி 2898AD படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.  இதைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ  அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில்  செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பெயரிடப்படாத இத்திரைப்படம் ராணுவ பின்னணியில் உருவாக உள்ளதாகவும், ஆக்சன் திரில்லர் கதைக் களத்தில் படம் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வரும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. 
 

Share this story