கமல்ஹாசனின் 'KH 237' பட அப்டேட்...!

கமல்ஹாசனின் 'KH 237' படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் இயங்குவார்கள் என்று தகவல் வெளியானது.
Explore the Experience @ikamalhaasan#KamalHaasan #KH237@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/4pVwFgLNP8
— AnbAriv (@anbariv) April 12, 2025
இந்நிலையில், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை அன்பறிவ் மாஸ்டர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதில், KH 237 என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.