கமல்ஹாசனின் புதிய லுக், புதிய பயணம்.. ஸ்ருதிஹாசனின் கமெண்ட்..!

shuruthi

உலக நாயகன் கமல்ஹாசனின் புதிய லுக் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படம் குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் பதிவு செய்த கமெண்ட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தக்லைஃப்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் விரைவில் அவரது அடுத்த படமான அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

null


இந்த நிலையில் இந்த படத்திற்கான புதிய லுக் குறித்த புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவில் ’புதிய பயணம் புதிய லுக் புதிய ஆரம்பம்’ என்று கேப்ஷன் ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ஸ்ருதிஹாசன் ’அன்புள்ள அப்பா சூப்பர் லுக்’ என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த கமெண்ட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this story