“பிறந்தநாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதி” - இளையராஜாவிற்கு வாழ்த்து சொன்ன கமலஹாசன் !

இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையையும், இளையராஜாவையையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு இசையோடு ஒன்றியிருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது இசைக்கு மயங்காதவர்களே கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். காதல், அன்பு, சந்தோஷம், சோகம் என பல தருணங்களில் அவரது இசை மருந்தாக அமையும்.
இசையுலக சக்ரவர்த்தியாக இருக்கும் இளையராஜா, இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிகிறார். இதையொட்டி திரையுலகை சேர்ந்த பலரும் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய… pic.twitter.com/0csPLNnE7P
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2023