கமலுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி... வேற லெவல் அப்டேட் !

kamal

கமல் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்த நிலையில், கமலின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கமலின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ‘துணிவு’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

kamal

தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பிசியாக இருக்கும் நிலையில் இரண்டு மாதத்தில் அந்த படத்தை முடித்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளார். 

kamal

இந்த படத்தை முடித்து மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு துவங்கும் என்றும், 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  

Share this story