‘அட அப்படியா சேதி…..’- கமலின் ‘தக்லைஃப்’ படம் குறித்த சூப்பர் தகவல்!

photo

கமல் ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் தயாராக உள்ள ‘தக்லைஃப்’ படம் எம்மாதிரியான கதைக்களத்தில் உருவாகவுள்ளது என்ற  தகவல் வெளியாகியுள்ளது.

photo

விக்ரம் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பிறகு கமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஷங்கருடன் கூட்டணிபோட்டு இந்தியன்2 படத்தில் நடித்து முடித்தார். படத்தின் போஸ்ட் புரொமோக்ஷன் பணிகள் படுஜோராக நடந்து வருகிறது. அதேப்போல மூன்றாம் பாகத்திலும் கமல் கவனம் செலுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து பிரபாஸ் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க உல்ளார்.

photo

இந்த நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு கமல் மணிரத்னத்தின் ‘தக்லைஃப்’ மற்றும் எச்.வினோத்துடன் ஒரு படம் என இரண்டு படப்பிடிப்பிலும் ஒரே சமயத்தில் கலந்துகொள்ள உள்ளார். தற்போதைய தகவலாக தக்லைஃப் படம் ஒரு பீரியாடிக் படமாக இருக்கும் என டைட்டில் வெளியீட்டு வீடியோவை வைத்து ரசிகர்கள் கணித்தனர். ஆனால் படம் சமகால ஆக்ஷன் அதிரடியில் உருவாக உள்ளதாம். விக்ரம் படத்தின் அறிமுக வீடியோவில் பீரியட் படம் போல காட்டிவிட்டு ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருப்பார் கமல், அதே பாணியை இந்த குழுவும் கையாளுகின்றார்களாம்.

 

 

Share this story