கமலின் ‘இந்தியன் 2’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது ? முக்கிய அப்டேட்

indian 2
 கமலின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. படப்பிடிப்பு ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட இப்படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. இதையடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

indian 2

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் திருப்பதியில் நடைபெற்றது. இதில் 1920 ஆண்டுகளில் நடைபெறும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் கமல் மற்றும் காஜல் அகர்வால் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. 

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடைபெற்று வந்தது. இதில் சேனாதிபதி கெட்டப்பில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. திருப்பதியில் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. 

Share this story