சென்சார் போர்டு பற்றி கமல் அறிக்கை -என்ன சொன்னார் தெரியுமா ?

kamal
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன்,  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்கு பின்பு, censor என்ற சொல்லை நீக்கச்சொல்லி, இந்தியாவின் ஒன்றிய (மத்திய) திரைப்பட சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம்.
Central board of film certification. சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல், தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரையுலகு வாதாடி ஒன்றிய (மத்திய) அரசை நீக்க வைத்த பிறகு அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக்கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்.

Share this story