கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்த உலக நாயகன் கமல்ஹாசன்...!
1722936195909
இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் 'தக் லைஃப்'படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். படத்தில் சிம்பு கமலுக்கு மகனாக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதற்கான டப்பிங் பணிகள் கடந்த வாரம் நடைப்பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் கமல்ஹாசன் இன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர் Cap மற்றும் Cooling Glass அணிந்துள்ளார். இவர் அருகில் ஒரு சிறுவனும் அவரைப் போலவே Cap மற்றும் Cooling Glass அணிந்துள்ளான். இந்த புகைப்படம் பார்க்க மிகவும் கியூட்டாக உள்ளது. தற்பொழுது இந்த படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது