'தைவான்'-ல் தொடங்கியது 'இந்தியன் 2' ஷூட்டிங்... விறுவிறுப்பாக படமாகும் காட்சிகள் !

indian 2

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று தைவானில் தொடங்கியுள்ளது.‌

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வருகிறது 'இந்தியன் 2'. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

indian 2

பல கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள கல்பாக்கம் டச்சுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கமல் மற்றும் காஜல் அகர்வால் நடிக்கும் ப்ரீயட் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டது. ஹாலிவுட் லெவலில் சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு கலைஞர்களும் இந்த படப்பிடிப்பில் பணியாற்றினர். 

indian 2

இதையடுத்து கமல், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தைவான் நாட்டிற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றனர். அங்கு பாடல் காட்சிகளை அழகான லோகேஷனில் ஷங்கர் படமாக்கி வருகிறார். ஏப்ரல் 8-ஆம் தேதியுடன் இந்த படப்பிடிப்பு நிறைவுபெறும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. இதில் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இரண்டு வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நிறைவுபெற்றவுடன் படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர். வரும் ஜூன் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து போஸ்ட் பிரொக்ஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

Share this story