ஹாலிவுட் ஸ்டெண்ட் கலைஞர்களுடன் கமல்.. உலக தரத்தில் படமாகும் ‘இந்தியன் 2’

 indian 2

‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்து ஹாலிவுட் ஸ்டெண்ட் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். 

அரசியல் அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் அதை வைத்தே பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

indian 2

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது ப்ரீயட் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை பனையூரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கமல் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச ஸ்டெண்ட் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். கமலுடன் ஸ்டெண்ட் கலைஞர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது. 

 

Share this story