மீண்டும் வருகிறது ‘வேட்டையோடு விளையாடு’... ஹாப்பியான கமல் ரசிகர்கள் !

VettaiyaduVilayadu

 கமல் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வேட்டையோடு விளையாடு’ படம் மீண்டும் ரீ ரிலீசாகவுள்ளது. 

உலக நாயகன் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘வேட்டையோடு விளையாடு’. வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் த்ரில்லரில் உருவான இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

VettaiyaduVilayadu

இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலானி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக கமல் கலக்கியிருந்தார். 

சைக்கோ த்ரில்லரில் உருவான இப்படத்தை செவந்த் சேனல் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் இப்படம் மீண்டும் 17 ஆண்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. புதிய பொலிவுடன் உருவாகி வரும் இப்படம்ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. வேட்டையோடு விளையாடு திரைப்படம் மீண்டும் வெளியாவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

 

Share this story