ஆஸ்கர் மியூசியத்தில் 'கமல்ஹாசன், ஏ.ஆர் ரஹ்மான்'- வைரலாகும் புகைப்படங்கள்.

photo

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள  ஆஸ்கர் மியூசியத்திற்கு கமல்ஹாசன், ஏ.ஆர் ரஹ்மான் சென்று பார்வையிட்ட காட்சிகள் மற்றும் இருவரும் காட்ஃபாதர் படம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

நடிகர் கமல்ஹாசன்  மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் தயாராகும் ‘இந்தியன்2’ படத்தின் ஸ்பெஷல் எபெக்ட் காட்சிகளின் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ‘கல்கி 289 எடி’ மற்றும் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகளுக்காக அங்கு சென்றிருந்த கமல் தற்போது இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கர் மியூசியத்தை சுற்றி பார்த்துள்ளார். அதில் இருவரும் இணைந்து ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற புகைப்படம், மற்றும்’ தி காட் பாதர்’ படத்தை கண்டு ரசித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த ஏ.ஆர்.ஆர்  “ ஒரு கோட் மற்றுமொரு கோட்-ஐ பார்க்கிறது” அதாவது GOAT என்றால் Greatest of all time என அர்த்தம்.

Share this story