கமலின் தக் லைஃப்... அறிவிப்பு வீடியோ வெளியானது...

கமலின் தக் லைஃப்... அறிவிப்பு வீடியோ வெளியானது...

கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதையடுத்து, பிரபாஸின் 'கல்கி 2898 ஏடி', ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் அவர் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். 'நாயகன்' படத்திற்கு பிறகு, 37 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவுக்காக ஒப்பந்தமாகியுள்ளார். கமல்ஹாசனின் 234 வது இது உருவாகிறது.  

படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது மட்டுமன்றி படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு காணொலியையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

Share this story