"என்னை சந்திக்க மறுத்து விட்டார்" -ஏ ஆர் ரஹ்மான் மீது பிரபல நடிகை தாக்கு

ar rahman

ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாக தாக்கிய கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டிக்கான ஸ்கிரீன்ஷாட் டை பகிர்ந்து, ‘அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் காவி சிந்தனையை ஆதரித்து வருவதால் திரைத்துறையில் அதிக பாரபட்சத்தையும், பாகுபாட்டையும் சந்திக்கிறேன். என்றாலும், உங்களை விட அதிக பாரபட்சமும், வெறுப்புணர்வும் கொண்ட ஒருவரை இதுவரை நான் சந்தித்தது இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு ‘சாவா’ படத்தை தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையே அவர் நினைவுபடுத்தி இருப்பதாக தோன்றுகிறது.

இந்தியில் கங்கனா ரனவத் தயாரித்து இயக்கி, இந்திரா காந்தி வேடத்தில் நடித்த ‘எமர்ஜென்சி’ என்ற படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க வேண்டும் என்று கங்கனா ரனவத் விரும்பினார். படத்தின் கதையை சொல்ல நேரில் சந்திக்க ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ‘நான் ‘எமர்ஜென்சி’ கதையை உங்களிடம் சொல்ல விரும்பினேன். என்னை நேரில் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரச்சார படம் என்பதால், அதில் இணைய நீங்கள் விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது. ‘எமர்ஜென்சி’ படம் விமர்சகர்களாலும், எதிர்க்கட்சி தலைவர்களாலும், அதன் சமச்சீர் மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறைக்காக பாராட் டப்பட்டது. உங்களுடைய வெறுப்புணர்வு உங்கள் கண்களை மறைத்துவிட்டது. உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Share this story