ஆஸ்கர் விருது குறித்து நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம்...!

நடிகை கங்கனா ரனாவத் ஆஸ்கர் விருது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து, உருவான இந்திப் படம், ‘எமர்ஜென்சி’. கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்து, இயக்கியிருந்தார். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவரும் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜனவரி மாதம் ரிலீஸான இந்தப் படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர், “என்ன ஒரு படம். இது இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள கங்கனா ரனாவத், “அமெரிக்கா அதன் உண்மையான முகத்தை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை, வளரும் நாடுகளை எவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்கள், அடக்குகிறார்கள் என்பதை எமர்ஜென்சி படத்தில் அம்பலப்படுத்தி உள்ளோம். அதனால், தங்கள் முட்டாள்தனமான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்திருக்கட்டும். நமக்குத் தேசிய விருதுகள் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.