விஜய் சேதுபதியுடன் புதிய படப்பிடிப்பில் இணையும் கங்கனா ரணாவத்

விஜய் சேதுபதியுடன் புதிய படப்பிடிப்பில் இணையும் கங்கனா ரணாவத்

விஜய் சேதுபதி, தற்போது அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது இவர் கங்கனா ரணாவத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். பிரபல நடிகை கங்கணா ரனாவத் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள எமர்ஜென்சி திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

விஜய் சேதுபதியுடன் புதிய படப்பிடிப்பில் இணையும் கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த முடித்துள்ளார். 
இந்நிலையில் மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளதாக நடிகை கங்கனா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

Share this story