பில்கிஸ் பானு பயோபிக்கை இயக்கி நடிக்கும் கங்கனா

பில்கிஸ் பானு பயோபிக்கை இயக்கி நடிக்கும் கங்கனா 

 பிரபல நடிகை கங்கணா ரனாவத் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள எமர்ஜென்சி திரைப்படம் நவம்பர் மாதம் வெளியானது. அதற்கு முன்பாக, பிவாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி பாகம் 2 படத்தில் நடித்திருந்தார். இதனிடையே, இந்தியில் கங்கனா விமானப் படை அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம் தேஜஸ். இப்படம் கடந்த அக்டோபர் மாதம்வெளியானது. 

பில்கிஸ் பானு பயோபிக்கை இயக்கி நடிக்கும் கங்கனா 

இதனிடையே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை தழுவி அவரது பயோ பிக்கில் கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். கதை ரெடியாக உள்ளது ஆனால் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்தார். 

Share this story