‘கங்குவா’... சூர்யா படத்தின் மிரட்டலான டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு !

Kanguva

சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக ‘சூர்யா 42’ மாறியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மாஸாக நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. 

Kanguva

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. 

Kanguva

இந்நிலையில் இந்த படத்திற்கு ‘கங்குவா’ என்று வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 1 நிமிடம் 16 வினாடிகள் ஓடக்கூடிய டைட்டில் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யாவும், அதற்கு பின்னர் வீரர்களும் இருப்பது போன்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story