‘கங்குவா’ : 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'ஃபையர் சாங்’

Kanguva

நடிகர் சூர்யா நடித்துள்ள  ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலான ‘ஃபையர் சாங்’ நேற்று  வெளியானது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ஃபையர் சாங்’ பாடலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘ஃபையர் சாங்’ வெளியான ஒரு நாளிலே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட  மொழிகளை சேர்த்து 5 மில்லியன் பார்வைகளைப் பெற்று, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 

Share this story