சூர்யாவின் ‘கங்குவா’ : முதல் சிங்கிள் நாளை ரிலீஸ்!

Suriya

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலான ‘ஃபையர் சாங்’ நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் நடனம் அமைத்துள்ளார்.சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

kanguva
இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘பையர் சாங்’ வரும் ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் 43-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருது வரை சென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்‌ஷித் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

null


 

Share this story