‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பு... இதயம் நிறைந்துவிட்டதாக சூர்யா நெகிழ்ச்சி !

suriya

 ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பால் என் இதயம் நிறைந்துவிட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திரைப்படம் ‘கங்குவா’. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் 5 கேரக்டரில் அவர் நடிக்கிறார். சரித்திர கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தென்னிந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

suriya

யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நட்ராஜ், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை 22 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் யூடியூப்பில் பார்த்துள்ளனர்.  இந்நிலையில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிகுந்த மன நிறைவுவோடும், பணிவுடனும், கடுமையாக பாடுபடுவேன். கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு நீங்கள் கொடுத்த அற்புதமான வரவேற்புக்கு நன்றி. மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்த எனது ரசிகர்களுக்கு நன்றி. மனம் நிறைந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Share this story