‘கங்குவா’ -ல் இணைந்த ‘கேஜிஎப்’ வில்லன்... சூர்யா படத்தின் புதிய அப்டேட்

kanguva

சூர்யாவின் ‘கங்குவா‘ படத்தில் ‘கேஜிஎப்’ நடிகர் அவினாஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ உருவாகி வருகிறது. இந்த படம் சூர்யாவின் கெரியரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா முதல் முறையாக 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

kanguva

 ஃபேண்டஸி கதைக்களத்தில் அதிகபட்ச அனிமேஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது.  இந்த படத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

kanguva

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது கொடைக்கானலில் இப்படத்தின் இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ‘கேஜிஎப்’ படத்தின்  மூலம் பிரபலமான நடிகர் அவினாஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உருவாக்கப்பட இருக்கும் ப்ரீயட் பகுதியின் படப்பிடிப்பு அவர் இணையவிருக்கிறார். அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

Share this story