‘கங்குவா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!- உற்சாகத்தில் ரசிகர்கள்.

சூர்யா நடிப்பில தயாராகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
சிறுத்ததை சிவா- சூர்யா கூட்டணியில் பீரியடிக் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. இந்த தலைப்பு சமீபத்தில் மோஷன் போஸ்டருடன் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்த நிலையில் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது , கங்குவா திரைப்படம் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறதாம். கிளைமேக்ஸில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியிள்ளது. இந்த செய்தியை கங்குவா படதயாரிப்பாளருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தனஞ்செயன் கூறியுள்ளார்.
அதாவது இந்த படத்தின் கதை மிகவும் பெரியது அதை சுருக்க தயாரிப்பாளர் விரும்பவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கம் தொடருக்கு பிறகு சூர்யாவுக்கு கங்குவா தொடராக அமையும் என்று தனஞ்செயன் கூறியுள்ளார். ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது. சூர்யா மற்றும் கதாநாயகி திஷா படானி உடனான முக்கிய காலகட்ட காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். இப்படம் வரும் 2024 தொடக்கத்தில் திரைக்காணும் என்றும், தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.