சூர்யாவின் ‘கங்குவா’ பட அப்டேட்!- அடுத்த கட்ட நகர்வு என்ன?

photo

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகிவரும் ‘கங்குவா’ படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

கங்குவா படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து சென்றிருந்த நிலையில் அதனை முடித்துவிட்டு இன்று சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இதில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், இது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்பதால் இதனுடம் சூர்யாவின் பங்கு முடிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்றும் தகவல் வந்துள்ளது.  இந்த படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு சூர்யா அடுத்து சுதாகொங்கரா இயக்கத்தில் அவரது 43வது படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.

Share this story