உடலை மீண்டும் குறைக்கும் சூர்யா... காரணம் என்ன தெரியுமா ?

suriya

 ‘கங்குவா’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் சூர்யா உடலை பிட்டாக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

ஃபேண்டஸி கதைக்களத்தில் அதிகபட்ச அனிமேஷன் காட்சிகளுடன் உருவாகும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

suriya

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா முதல் முறையாக 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.  இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும்.

suriya

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீயட் பகுதி படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த படத்தின் ப்ரீயட் படப்பிடிப்பிற்காக உடல் எடையை கூட்டி நடிகர் சூர்யா நடித்து வந்தார். சமீபத்தில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இது குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகி அதை உறுதிப்படுத்தியுள்ளது. 

Share this story