‘கங்குவா’ -க்காக உடல் எடையை அதிகரித்த சூர்யா... புதிய தோற்றத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !

suriya

‘கங்குவா’ படத்திற்காக நடிகர் சூர்யா உடல் எடையை கூட்டியுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது.  இந்த படத்தில் நடிகர் சூர்யா முதல் முறையாக 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.  இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும்.

suriya

சூர்யா மிரட்டலாக நடித்து வரும் இப்படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ‘கங்குவா’ படத்திற்காக உடல் எடையை நடிகர் சூர்யா கூட்டியுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story