கங்குவாவின் வில்லன் இவர்தான்... உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் !

kanguva

'கங்குவா' படத்தில் வில்லனாக பிரபல நடிகர் நடிப்பதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். 

kanguva

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக 'கங்குவா'. முதல் முறையாக நடிகர் சூர்யா 5 வருடங்களில் நடிக்கும் இந்த படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை 5டியில் தொழில்நுட்பத்தில் உருவாகிறது.  இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.

kanguva

கங்குவா என்றால் நெருப்பின் கங்கு போல கோபமும், வீரமும் உடைய வீரன் என்று அர்த்தமாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக  படத்தில் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார்.

kanguva

இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டது. தற்போது இந்த படத்தின் ப்ரீயட் தொடர்பான காட்சிகள் கொடைக்கானல் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அதனை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர், நட்டி நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் அவருக்கு மிகப்பெரிய ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. இந்த தகவலை மட்டும்தான் தற்போது என்னால் கூற முடியும் என்று கூறினார். 

Share this story