ஜெயிலருக்கு கிடைத்த வரவேற்பு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிவ் ராஜ்குமார் !

jailer

'ஜெயிலர்' படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நடிகர் சிவ் ராஜ்குமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று முன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

jailer

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு கன்னட நடிகர் சிவ் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கன்னட நடிகர் சிவ் ராஜ்குமார், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராபுடன் இணைந்து நானும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

jailer

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ், இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு நன்றி. ரஜினிகாந்துடன் நடிக்க எவ்வளவு பேர் காத்திருக்கையில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அன்பு என்றும் என் இதயத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். 


 

Share this story