கன்னட மொழி விவகாரம்: கமலுக்கு ஆதரவாக பேசிய சிவராஜ்குமார்...!

கன்னட மொழி விவகாரத்தில் கமல் ஹாசனுக்கு நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன், தமிழ் மொழியிலிருந்து வந்ததுதான் கன்னடம் எனப் பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதனால், கர்நாடகத்தில் பல இடங்களில் தக் லைஃப் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்துப் பேசிய கமல் ஹாசன், ''பல மொழி வரலாற்று அறிஞர்கள் கூறியதைத்தான் நான் கூறினேன். தக் லைஃப் படத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகிறது. என் படத்தை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேசத் தகுதி இல்லை; ஏனெனில், இதில் அவர்களுக்குப் போதிய படிப்பினை இல்லை. அன்பு ஒருபோதும் மன்னிப்புக் கேட்காது" எனத் தெரிவித்திருந்தார்.
Shivanna's latest video about Kamal Haasan's Kannada language issue. This is pure gem reply from #Shivarajkumar sir👏🏽#KamalHaasan𓃵 | #Thuglife
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) May 29, 2025
pic.twitter.com/eYyzBjeK6H
இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் கமல் ஹாசனுக்கு தன் ஆதரவைத் தெரிவித்ததுடன், “நடிகர் கமல் ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்துள்ளீர்கள்? சர்ச்சை எழும்போது மட்டும் குரல்கொடுக்காமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.