கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ ஓடிடியில் ரிலீஸ்...
1740827433582
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த ‘பைரதி ரணகல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் , ராகுல் போஸ், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பைரதி ரணகல்’. இந்தப் படத்தை கீதா சிவராஜ்குமார் தயாரித்தார்.
கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படம் தான் தமிழில் சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ என ரீமேக் ஆனது. இந்தப் படத்தின் முன்கதை அதாவது ப்ரீக்வெலாக கன்னடத்தில் உருவான படம் தான் ‘பைரதி ரணகல்’. இந்த படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

