மெலோடியாய் உருவாகியுள்ள ‘குருகுரு’ பாடல்.. ‘கண்ணை நம்பாதே’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணை நம்பாதே’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா என பலர் நடித்துள்ளனர்.
லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். சித்துக்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ‘குருகுரு’ என தொடங்கும் அந்த பாடல் மெலோடி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சித்துகுமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விவேக் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். ஆத்யா என்பவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#KannaiNambathey’s first song, #KuruKuru is out now?? https://t.co/VOxnXQEZbf @Udhaystalin @mumaran1 @im_aathmika @Prasanna_actor @bhumikachawlat @Act_Srikanth @Music_Siddhu @SubikshaOffl #JalandharVasan @Sanlokesh @lipicinecrafts @kalaignartv_off @saregamasouth @DoneChannel1
— Red Giant Movies (@RedGiantMovies_) March 6, 2023