‘குறுகுறு’ என தொடங்கும் முதல் பாடல்.. ‘கண்ணை நம்பாதே’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் உதயநிதி தற்போது முழு நேர அரசியல்வாதியாகி விட்டார். கடைசியாக அவர் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய திரைப்படங்கள் மட்டும் ரிலீசாகாமல் இருக்கிறது. அதில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வரும் மார்ச் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ள இந்த படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா என பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குறுகுறு’ என தொடங்கும் அந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.