“சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம்” - நடிகை ஆத்மிகா

aathmika

என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம் ‘கண்ணை நம்பாதே’ என நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகுந்த கவனம் பெற்ற நடிகையாக உருவெடுத்துள்ளார் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஆத்மிகா கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசுரன்’ படத்தார். இதையடுத்து விஜய் ஆண்டனியுடன் ‘கோடியில் ஒருவன்’, வைபவ்வுடன் ‘காட்டேரி’, உதயநிதியுடன் ‘கண்ணை நம்பாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

aathmika

இந்நிலையில் உதயநிதி நடிப்பில் வெளியான ‘கண்ணை நம்பாதே’ நாளை வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்து கதாநாயகியாக நடித்துள்ள பேசியுள்ள அவர், ஒவ்வொரு நடிகைக்கும் தனது திறமையை நிரூபிக்கும் கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்துள்ள திரைப்படம் தான் 'கண்ணை நம்பாதே'. 

 இந்தப் படம் என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். இயக்குனர் இந்தப் படத்தில் கதையை கூறிய போது கதாபாத்திரத்தோடு ஒன்றி விட்டேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பது போல் இருந்தது. உதயநிதியுடன் நடித்தது சிறப்பான அனுபவம். இந்தப் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

Share this story