உதயநிதியின் “கண்ணை நம்பாதே” திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

photo

இரவுக்கு ஆயிரம் கண்கள்படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் “கண்ணை நம்பாதே” இந்த படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா என பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசையமைத்துள்ளார்.

photo

லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார்  தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த டிரைலரில்இந்த உலகத்துல நடக்குற எல்லா கொலைகளுக்குப் பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்என்ற வசனத்துடன் தெடங்கியுள்ளது.

யூகிக்க முடியாத கதைக்களத்தில் இந்த டிரைலர் வெளியாகியுள்ளது.  மேலும் வரும் மார்ச் 17ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் மீதான் எதிர்ப்பர்பை அதிகரித்துள்ளது.


 

Share this story