‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு.

‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் மு. மாறன். இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவ்ருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துல்ளார். சஸ்பென்ஸ், கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்திற்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர், படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் கும்மிருட்டில், உதயநிதி காரிலிருந்து இறங்கி மெதுவாக ஒரு வீட்டிற்குள் செல்கிறார். சற்று பயத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் விதமாக இந்த ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.