அந்த நிறுவனத்தில் இருந்து எப்போதோ வெளியேறிவிட்டேன் - நடிகர் உதயநிதி !

KannaiNambathe

 ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து எப்போது வெளியேறிவிட்டேன் என்று நடிகர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.‌ க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் 17-ஆம் தேதி வெளியாகிறது. உதயநதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

KannaiNambathe

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட உதயநிதி பேசியபோது, நான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து பல மாதங்களுக்கு முன்னரே வெளியேறிவிட்டேன். கண்ணை நம்பாதே படத்தையும் அவர்கள் ரிலீஸ் செய்கிறார்கள் என்று அவர் கூறினார். மேலும் 4 ஆண்டுகளாக உழைப்பின் காரணமாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன் என்றும் தெரிவித்தார். 

KannaiNambathe

பிசியாக நடிகராக வலம் வந்த உதயநிதி, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அதன்பிறகு சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதனால் சினிமாவில் இருந்து அதிரடியாக விலகினார். சினிமாவில் இருந்து விலகுவதற்கு முன் உதயநிதியின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ‘கண்ணை நம்பாதே’. இந்த படம் அடுத்த வாரம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story