`கண்ணப்பா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள `கண்ணப்பா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Mark your calendars! 📅 The legend of #Kannappa🏹 hits the big screen on 27th June! 🎥#HarHarMahadevॐ pic.twitter.com/d9TtzAJ1MI
— Vishnu Manchu (@iVishnuManchu) April 10, 2025
இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இம்மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைப்படம் வெளியாகவில்லை. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. படக்குழுவினர் அண்மையில் உ.பி முதல்வரான யோகி ஆதித்தனாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.