3 விருதுகளை குவித்த ‘கண்ணே கலைமானே’.. சீனு ராமசாமிக்கு குவியும் பாராட்டுக்கள் !

KanneKalaimaane

 சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் 3 விருதுகளை குவித்துள்ளது. 

KanneKalaimaane

தனது யதார்த்தமான படைப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் சீனு ராமசாமி. அவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு உதயநிதி ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. 

KanneKalaimaane

இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மனதை தொடும் வகையில் மனிதம் குறித்து இந்த படம் பேசியது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

KanneKalaimaane

இந்நிலையில் இப்படம் இந்தோ - பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் பங்கேற்றது. அங்கு இந்த படத்திற்கு மூன்று விருதுகள் கொடுக்கப்பட்டது. சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதியும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் வென்றுள்ளனர். விருது பெறும் அனைவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

Share this story