'காந்தாரா 2' : மோகன்லாலுக்கு பதிலாக நடிக்கும் ஜெயராம்

jayaram

ரிஷப் செட்டி இயக்கி நடித்து வரும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டன. கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'காந்தாரா'. இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் 'பஞ்சுருளி' என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.


ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

kanthara
 
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான மோகன்லால் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
 
ஆனால் தற்போது காந்தாரா 2ம் பாகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டன. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

Share this story