'காந்தாரா: சாப்டர் 1' ரிலீஸ் தள்ளிப்போகிறதா...? - படக்குழு அளித்த விளக்கம்...!

kanthara

'காந்தாரா: சாப்டர் 1'படம் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியான நிலையில், அதனை படக்குழு மறுத்துள்ளது. 


ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'காந்தாரா: சாப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், சமீபகாலமாக இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருப்பதால் படம் ரிலிஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் என்று இணையத்தில் வதந்திகள் பரவின.

இந்நிலையில், ரிலிஸ் தேதியை உறுதிப்படுத்தவும், ஒத்திவைப்பு பற்றிய வதந்திகளை நிராகரிக்கும் விதமாகவும் படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.  
அதில், ", காந்தாரா: சாப்டர் 1 தள்ளிப்போகிறதா?" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அதற்கு பிறகு `இல்லை' என்ற பதில் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதன் மூலம் காந்தாரா: சாப்டர் 1 அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

Share this story

News Hub