கேஜிஎப்பை மிஞ்சிய காந்தாரா... வசூலில் சாதனை மேல் சாதனை
’கேஜிஎப்’ படத்தின் வசூலை ‘காந்தாரா’ திரைப்படம் மிஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக கன்னட சினிமா திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2, சார்லி உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம்தான் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார்.

இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கதாநாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தை இணைந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் கேஜிஎப் திரைப்படங்களையே மிஞ்சியுள்ளது. தற்போது வரை இந்த படம் இந்தியாவில் 170 கோடியும், உலகளவில் 200 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. கேஜிஎப் திரைப்படங்களை விட காந்தாரா வசூலை குவித்துள்ளளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

