‘லால் சலாம்’ படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த கபில் தேவ்!

photo

லால் சலாம் படத்தில் தனது கேரக்டருக்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளார் கபில் தேவ்.

photoலைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபல கிரிக்கெட்டரான கபில் தேவ்வும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது கேரக்டருக்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Share this story