மறு வெளியீடாகும் வசூலில் புரட்சி செய்த ராமராஜன் படம்-எந்த படம் தெரியுமா ?

ramarajan

ஒரு பாடலுக்கு இசை அமைக்க 6 மாதங்கள் போராடுபவர்களுக்கு மத்தியில், தற்போது தான் இசை அமைக்கும் ‘கடவுள் தந்த பரிசு’ என்ற படத்துக்காக, ஒரே நாளில் 6 பாடல்களை கம்போஸ் செய்து, அடுத்த 6 நாட்களில் அப்பாடல்களை பிரமிக்கத்தக்க வகையில் ஒலிப்பதிவு செய்து அசத்திய இளையராஜாவை, இப்படத்தின் ஹீரோ ராமராஜன், இயக்குனர் காசிமாயன், வசனகர்த்தா ஏ.என்.ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

நகைச்சுவை பகுதி வசனத்தை இயக்குனர் ஏ.என்.ராஜகோபால் எழுதுகிறார். எம்.அடைக்கலம், ஏ.என்.ராஜகோபால் இணைந்து வசனம் எழுதுகின்றனர். படப்பிடிப்பு ஒரேகட்டமாக நடத்தி முடிக்கப்படுகிறது. இந்நிலையில், கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற ‘கரகாட்டக்காரன்’ என்ற படம், 37 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சினிமாஸ்கோப், டிடிஎஸ் ஒலியுடன் புதுப்பிக்கப்பட்டு, விரைவில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. கடந்த 1989களில் வசூலில் புரட்சி செய்த இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் இன்றுவரை பட்டிதொட்டி முழுக்க ஒலித்து வருகிறது.

Share this story