கங்குவா படத்தை பாராட்டிய கரண் ஜோஹர்.. என்ன சொன்னார் தெரியுமா..?

சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை பார்த்த கரண் ஜோஹர் இயக்குனர் சிறுத்தை சிவாவை பாராட்டியதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ தெரிவித்துள்ளார்.
சூர்யா மற்றும் சிவா கூட்டணியில் உருவான கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது. ஞானவேல் ராஜாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கின்றது. அதில் முதல் பாகம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த தினத்தில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக அறிவிப்பு வந்ததால் கங்குவா தள்ளிப்போனது. தற்போது நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா வெளியாக இருக்கும் நிலையில் தற்போதே படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கியுள்ளது. சூர்யா கங்குவா படத்தின் மூலம் முதல் முறையாக ஒரு பான் இந்திய படத்தில் நடிக்கின்றார். கிட்டத்தட்ட பத்து மொழிகளில் கங்குவா திரைப்படம் மிகப்பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் பல மொழி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். எனவே தமிழில் இப்படத்திற்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கின்றதோ அதே அளவு எதிர்பார்ப்பு மற்ற மொழிகளிலும் இருக்கின்றது. இந்நிலையில் சூர்யாவின் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அவரின் ரசிகர்கள் அனைவரும் கங்குவா திரைப்படத்தை தான் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். கண்டிப்பாக இப்படம் சூர்யாவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற எதிர்பார்ப்பில் சூர்யாவின் ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட் பல மொழிகளில் விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
"#KaranJohar have watched #Kanguva 40 mins of the content & Praised the director and team for an Hour🤞💥" pic.twitter.com/ygvcCtPDzH
— AmuthaBharathi (@CinemaWithAB) October 14, 2024
இந்நிலையில், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ஊடகங்களை சந்தித்து பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.அந்த பேட்டியில் படத்தை பற்றி பல விஷயங்களை பேசி வருகின்றனர்.அப்போது தான் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் கங்குவா படத்தை பார்த்ததாகவும் ,படத்தை பார்த்து அவர் ரொம்ப இம்ப்ரஸானதாகவும் கூறியுள்ளார். கரண் ஜோஹர் கங்குவா படத்தின் 40 நிமிட காட்சிகளை பார்த்து மிரண்டுபோனாராம். படத்தை பற்றி பாராட்டி சிவாவிடம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினாராம்.இந்த தகவலை சிவா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்
இந்நிலையில் கங்குவா படத்தை பற்றி பெரும்பாலும் பாசிட்டிவான டாக் தான் இருந்து வருகின்றது. மேலும் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பையும் பெற்றது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இருக்கும் சூழவில் சூர்யாவிற்கு கண்டிப்பாக ஒரு ஹிட் தேவைப்படுகின்றது. அந்த ஹிட்டை கங்குவா திரைப்படம் பெற்று அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பப்படுகின்றது. சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கங்குவா திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது