தக் லைஃப் பார்க்க தமிழ்நாட்டுக்கு வரும் கர்நாடக மாநிலத்தவர்கள்

thug life

கமலின் சர்ச்சை பேச்சால் கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்’ திரைப்படத்தை காண தமிழகத்தின் ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும்,கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் .

கமல்ஹாசனும் மணிரத்னமும் நாயகன் படத்திற்குப் பின் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'தக் லைஃப்'. அவர்கள் இருவரும் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்த படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. தக் லைஃப் படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கும் தக் லைஃப் கர்நாடக மாநிலத்தில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை .இதற்கு காரணம் கமலின் கன்னட மொழி குறித்து பேசிய சர்ச்சை பேச்சு .
இதனால் கர்நாடக மாநில கமல் ரசிகர்கள் இந்த படத்தினை பார்க்க பெங்களூருக்கு அருகில் உள்ள தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள திரையரங்கில் கர்நாடகா மாநிலத்தவர்கள் வருகை தந்து பட்டாசு வெடித்து, டிஜே நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களை விட 80 சதவீதம் கர்நாடக மாநிலம் ரசிகர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

Share this story