முதல் வாரம் 380.. 2வது வாரம் 500... ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ள ‘சர்தார்’ !

sardar

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் ஸ்கிரீன் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபார் 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

sardar

தண்ணீர் மாஃபியா குறித்தும், உளவாளி வாழ்க்கை குறித்தும் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் திரையங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமரசனங்களை பெற்றுள்ளது. அதனால் உலகம் முழுவதும் 65 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் கடந்த தீபாவளியையொட்டி சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ மற்றும் கார்த்தியின் ‘சர்தார்’ ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியானதால் சமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வெளியானது. இதில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. ஆனால் சர்தார் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனால் முதல் வாரத்தில் வெறும் 580 ஸ்கிரீன்கள் மட்டும் வெளியிடப்பட்ட சர்தார் திரைப்படம், இரண்டாவது வாரத்தில் 500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Share this story