ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்கும் கார்த்தி... ஷூட்டிங் குறித்து புதிய அப்டேட் !

karthi

கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்  நலன் குமாரசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்‌. தமிழில் வெளியான முதல் டார்க் காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

karthi

இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய 'காதலும் கடந்து போகும்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

karthi

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

Share this story