சூர்யாவும், நானும் சேர்ந்து நடிப்பது உறுதி - நடிகர் கார்த்தி

சூர்யாவும், நானும் சேர்ந்து நடிப்பது உறுதி - நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹெய்ஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படமானது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் கிளிம்ப்ஸ் காணொலி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஜப்பான் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. டப்பிங் தொடர்பாக படக்குழு வெளியிட்ட வீடியோ 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இத்திரைப்படம் தீபாவளிய பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது.

சூர்யாவும், நானும் சேர்ந்து நடிப்பது உறுதி - நடிகர் கார்த்தி

இந்நிலையில், படம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி, அண்ணனும் நடிகருமான சூர்யாவும், தானும் இணைந்து கண்டிப்பாக ஒரு படத்தில் நடிப்போம் என்று தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story