சாதி குறித்து நடிகர் கார்த்தி கூறிய சரவெடி பதில்.

கார்த்தி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள ‘ஜப்பான்’ படத்தின் புரொமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சாதி குறித்து நச் என பேசியுள்ள கார்த்தியின் பேச்சு வைரலாகி வருகிறது.
உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள படம் கார்த்தியின் ஜப்பான். வரும் தீபாவளி ஸ்பெஷலாக படம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிபார்பை அதிகரித்துள்ளது. தொடர்ந்து படத்தின் புரொமோஷன் பனிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகர் கார்த்தி சாதி குறித்து பேசியுள்ளார் அவர் கூறியதாவது, “மெட்ராசில் வளர்ந்தவன் நான் எனக்கு சாதியெல்லாம் தெரியாது, பொதுவாக மெட்ராசில் வளர்ந்தவர்களுக்கு சாதியெல்லாம் தெரியாது. யாரோடு பழகினாலும் பெயரை கேட்போம் அவ்வளவுதான்” என கூறியுள்ளார்.